திரெளபதி அம்மன் கோயில் திறப்பு; ஆனால் இதற்கு மட்டும்தான் அனுமதி - உயர்நீதிமன்றம்!

Madras High Court Viluppuram
By Sumathi Mar 19, 2024 10:10 AM GMT
Report

திரெளபதி அம்மன் கோயில் தினசரி பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

திரெளபதி கோயில்

விழுப்புரம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டு திருவிழாவின்போது சென்ற தலித் இளைஞர் கதிரவன் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார்.

draubadi temple

இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், கோவிலில் வழிபடுவதற்கு இந்து ஆதிதிராவிடர் சமூகத்தினரை அனுமதிக்காதது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கோவிலுக்குள் அனுமதிக்காவிட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறுவோம் - கிராம மக்கள் திடீர் அறிவிப்பு!

கோவிலுக்குள் அனுமதிக்காவிட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறுவோம் - கிராம மக்கள் திடீர் அறிவிப்பு!

உயர்நீதிமன்றம் அனுமதி

அதனைத் தொடர்ந்து, திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாசியர் சீல் வைத்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பட்டியலின மக்களை கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

madras high court

அதன்பின், சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்கவும், பூஜைகள் மேற்கொள்ள பூசாரிகளை நியமிக்கவும் அறநிலையத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் கோயில் மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.