பிரபுவும் குஷ்புவும் திருமணமே பண்ணிட்டாங்க; ஆனால்... ரகசியம் உடைத்த பிரபலம்!
பிரபுவுக்கும் குஷ்பூவுக்கும் திருமணம் நடந்ததாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரபு-குஷ்பூ
80களில் சினிமாவில் நடந்த விஷயங்களை பேசி யூட்யூபில் பிரபலமானவர் டாக்டர் காந்தராஜ். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "குஷ்பூவுக்கு கோயில் கட்டும் அளவுக்கு நம்ம ஊர்க்காரர்கள் வெறிப்பிடித்து அலைந்தார்கள்.
ரஜினிகாந்த்தே கொண்டையில் தாழம்பு கூடையில் என்ன பூ குஷ்பூ என்று பாடும் நிலைமைக்கு சென்றார். ரபு - குஷ்பூ காதல் தலைப்பு செய்தியாக வரும் அளவு இருந்தது. காதல் என்றுகூட தலைப்பு செய்தி போடவில்லை. இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது என்றே ஒரு பத்திரிகை தலைப்பு செய்தி போட்டுவிட்டது. அதன் பிறகு பெரிய ரகளையே ஆனது.
திருமணம்?
அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள்கூட வெளியாகின. அன்றைய பத்திரிகைகளில் அது ரொம்பவே பிரபலம். அந்த விஷயம் எழுந்தபோது பிரபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்தார்கள். இருவரும் இணைந்து நடித்த படங்கள் பயங்கர ஹிட்டடித்தன. குஷ்பூவுக்கு பெரிய டிமாண்டே தமிழ் சினிமாவில் இருந்தது. அந்த நேரத்தில் அவர்களுக்கான திருமணம் நடந்தது.
இருவருக்கும் நடந்த திருமணத்துக்கு பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று ஒரு தகவலும் உண்டு. அதற்கு மேல் போகக்கூடாது. அதற்குள் போனால் அது அவர்களின் சொந்த விஷயம். பிரபு - குஷ்பூ காதல்வரைதான் பொது விஷயம். அது முறிந்ததற்கான காரணம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனஸ்தாபம் என்றால் அதுகுறித்து நாம் பேசலாம்.
ஆனால் குடும்பத்துக்குள் நடந்த விஷயங்களை நாம் பேசக்கூடாது. ஏனெனில் பிரபுவும் குஷ்பூவும்தான் சினிமாக்காரர்கள். பிரபுவின் மனைவி சினிமாக்காரர் இல்லை. இருவருக்கும் திருமணம் என்று தலைப்பு செய்தி போட்ட பத்திரிகையே அவர்களாக கொடுத்துதான் நாங்கள் இதை போட்டோம் என்று விளக்கமும் கொடுத்தார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.