ரொமான்ஸ் வரும்போதெல்லாம் அந்த நடிகரைத் தான் நினைப்பேன் - குஷ்பூ பகீர்!
தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ.
குஷ்பூ
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து முன்னனி நடிகையாக உச்சம் பெற்றார். ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டார். 2 மகள்கள் உள்ளனர். தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மோஸ்ட் ரொமான்ஸ் விருது யாருக்கு கொடுக்கப்படலாம் என்று கேட்டு அதற்கான ஆப்ஷன்ஸ்
ஐ லவ் கார்த்திக்
நடிகர் அரவிந்த் சாமி, நடிகர் கார்த்திக், சுந்தர்.சி ஆகியோரின் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பூ, சந்தேகமே இல்லை, நடிகர் கார்த்திக் தான், எனக்கு ரொமான்ஸ் வரும் போதெல்லாம் ஐ லவ் கார்த்திக் என்று சொல்லிவிட்டு அவரின் புகைப்படத்தை பார்த்து முத்தமும் கொடுத்தார்.
ஆனால் கார்த்திக்கின் அருகில் அவரின் கணவர் புகைப்படமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.