அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தை காணவில்லை - குடியரசு தலைவர் செயலகம் அதிர்ச்சி
அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் காணவில்லை என குடியரசு தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.
ராஜினாமா கடிதம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரஷாந்த் என்பவர் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலர் மற்றும் குடியரசுத் தலைவரின் செயலாளரிடம் அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் என்ன காரணத்திற்காக அம்பேத்கர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற விவரத்தையும் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சரவை செயலகம், அம்பேத்கர் கடந்த 1951ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ராஜினாமா செய்ததாகவும், வேறு எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அமைச்சரவை செயலகத்தின் பதிலை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்திடம் பிரஷாந்த் முறையிட்டார்.
காணவில்லை
அம்பேத்கரின் ராஜினாமா கடிதம் நிச்சயம் பிரதமரின் செயலகத்தில் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அரசியலமைப்புச்சட்ட விவகாரங்கள் பிரிவில் நீண்ட நேரம் தேடியும் அதற்கான
ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று குடியரசுத் தலைவரின் செயலகம் பதில் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.