வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி?

India
By Sumathi Aug 27, 2022 07:35 PM GMT
Report
170 Shares

எங்கெல்லாம் அடக்குமுறைகள் இழைக்கப்படுகிறதோ அதற்கு எதிரான குரல்களுக்குப் பெயர், அம்பேத்கர்.

பிறப்பு

அம்பேத்கர் இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள "மாவ்” எனும் இடத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் தம்பதியருக்கு 14வது குழந்தையாக 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் பிறந்தார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

இவரது குடும்பம் மராத்திய வர்கத்திரை தழுவியது. அம்பேத்கருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் “பீமாராவ் ராம்ஜி”.இவர்கள், “மகர” என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

அம்பேத்கரின், தந்தை மாலோஜி சாக்பால், ஆங்கிலேயரின் இராணுவத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர், வசித்த மோ பகுதியே இராணுவ தலைமையிடமாக செயல்பட்டு வந்தது.

எனவே அம்பேத்கருக்கு இராணுவத்துடன் ஆரம்ப காலத்தில் நல்ல தொடர்பு இருந்து வந்துள்ளது.

படிப்பு

இராணுவத்தில் இருந்து ராம்ஜி மாலோஜி சக்பால் ஓய்வு பெற்ற போது அம்பேத்கருக்கு வயது இரண்டு. பின் குடும்பத்துடன், மத்திய இந்தியாவிலிருந்து கொங்கணத்திலி தபோலி என்ற ஊருக்கு குடியேறினர்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

அம்பேத்கருக்கு 5 வயது இருக்கையில், அவரது அண்ணனுடன் ஆரம்ப கல்வியை துவங்கினார்.

பின் ராம்ஜி சக்பால் பம்பாயில் குடியேறி சத்தராவில் இராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு வேலையில் அமர்ந்தார். சத்தாராவில் இவர்கள் குடியேறிய நேரத்தில் அம்பேத்கரின் தாயார் பீமாபாய் மறைவுற்றார்.

அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் பள்ளிக்கு செல்கையில், ஒரு சாக்குத் துண்டுடன் செல்வார்கள்.

படிப்பில் கவனம்

வகுப்பின் மூலையில் அதை கீழே போட்டு அதன் மீது அமர்வார்கள். அவர்கள், இருவரின் குறிப்பேடையும் ஆசிரியர் தொடமாட்டார். பள்ளியில் தண்ணீர், இருக்கை, போன்ற பலவற்றில் மற்ற மாணவர்களிடம் இருந்து வேறுப்படுத்தி காட்டினர் ஆசிரியர்கள்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

இதனால், அம்பேத்கருக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்தது. தனது பொழுதுகளை விளையாட்டில் கழித்து வந்தார்.

அவரை வீட்டில் காண்பதே அரிதான நிகழ்வாகவே இருந்துள்ளது. அவரது தாய் மறைவிற்கு பின், தந்தை மறுமணம் செய்து கொண்டார். இது அம்பேத்கருக்கு பிடிக்கவில்லை.

எனவே தனது தந்தையை சார்ந்திருக்க கூடாதென்று மும்பையில் நூற்பாலையில் வேலைக்கு சென்று தனது கவனத்தை படிப்பின் மீது செலுத்த தொடங்கினார்.

உயர்கல்வி

அதன் மூலம் தனது விளையாட்டு தனத்தை முற்றிம் துறந்தார். தொடர்ந்து படிப்பில் நல்ல முன்னேற்றம் காணத் துவங்கினார். அப்பாவின் துணையுடன், ஹோவர்ட் ஆங்கில பாடநூலைக் கற்றார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

மேலும், புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு பற்றிய நூல்களையும் படித்தார். இதனால், மொழிபெயர்ப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.

தொடர்ந்து அம்பேத்கர் பாடநூல்களை படிப்பதை விட மற்ற நூல்களை படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய ஆசிரியர் ஒருவர், நீ படிப்பது வீண் என்று பலமுறை சொல்லிக்காட்டி சாதிய ரீதியில் தாக்கினார்.

இதனால், ஒருமுறை சினம் கொண்ட அம்பேத்கர், உங்கள் வேலையை நீங்கள் பார்த்து கொண்டு போங்கள் என்று பதிலடி கொடுத்தார் அம்பேத்கர்.

தீண்ட தகாத மாணவர் - சாதனை

ஆனால், வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர், சமஸ்கிரதத்தை மொழிப்பாடமாக கற்க அனுமதிக்கப்படவில்லை. 1907ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளி மெட்ரிகுலேசன் தேர்வில் அம்பேத்கர் தேர்ச்சி பெற்றார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

அப்போது தீண்ட தகாத மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அதற்காக அம்பேத்கருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தன் தந்தையின் விருப்பத்தினால் ஊக்கம் பெற்றிருந்த அம்பேத்கர் பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். ஒரு தீண்டப்படாதவருக்கு இது ஒரு புதிய அனுபவம்.

தொடக்கம் முதலே முனைப்புடன் படிக்கத் தொடங்கினார். இந்நேரத்தில் அம்பேத்கரின் தந்தைக்கு பண கஷ்டம் ஏற்பட்டது.

பரோட மன்னர் உதவி

அப்போது பரோடா மன்னர் தீண்டதகாத சிறந்த மாணவர்களுக்கு படிக்க உதவுவதாக அறிவித்திருந்தார். அதை கேள்விபட்டு அந்த உதவியை நாடினார் அம்பேத்கர். சாயஜிராவ் கெய்க்வாடு சிற்றரசர் இந்த வாய்ப்பு அம்பேத்கருக்கு கிடைக்க உதவினார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

அதன்படி, அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் மேற்படிப்புக்கு சென்றார் அம்பேத்கர்.

பதிலுக்கு படித்து முடித்தப்பின் 10 ஆண்டுகள் பரோட மன்னரின், அரசியலில் வேலை செய்யும் ஒப்பந்தத்தில் அம்பேத்கர் கையெழுத்திட்டார். அம்பேத்கருக்கு கொலம்பிய பல்கலைகழகம் புதிய அனுபவத்தை தந்தது.

தினமும் 18 மணிநேரம் படிப்பில் கவனம் செலுத்தினார். 1915ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம்பெற்றார்.

டாக்டர் பட்டம்

பின் 1916ஆம் ஆண்டு இந்தியாவின் ஆதாயப் பங்கு ஒரு வாரலாற்று கண்ணோட்டம் என்ற ஆய்வு கட்டுரையை கொலம்பிய பல்கலைகழகத்தில் சமர்பித்து டாக்டர் பட்டத்தை பெற்றார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

கல்லூரி படிக்கும் காலத்திலேயே அம்பேத்கரின் தந்தையும் இறந்தார். கல்வி காலத்தில் பணகஷ்டத்தில் பல நாட்கள் உணவு இன்றி படிப்பே உணவு என்று இருந்துள்ளார் அம்பேத்கர்.

பரோடா மன்னர் உதவித்தொகை நிறுத்திவிட்டதால்,அவருடைய எம்.எஸ். சி ஆய்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பரோடா மன்னரிடம் படைத்துறை தலைவாரக பணியாற்றினார்.

அங்கிருந்து, மும்பைக்கு திரும்பிய அம்பேத்கர், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க துவங்கியதுடன், பத்திரங்களில் அறிவுரை வழங்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார்.

தீண்டதகாதவனின் அறிவுரை

இதில் பல வாடிக்கையாளர்கள் ஒரு தீண்டதகாதவனின் அறிவுரை ஏற்க முடியாது என்று அவரிடம் வர மறுத்துவிட்டனர். ஆசிரியர் பணியை தொடர்ந்த அவரின் உரையை கேட்க பல மாணவர்கள் திரண்டனர்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

1921ஆம் ஆண்டு காலத்தில் தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றியவாறே மூன்று புத்தகங்கள் வெளியிட்டார். 1923 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சங்கத்தில் சேர்க்கப்பட்டாலும் வாதிடும் தொழிலுக்கு தீண்டாமை தடையாக இருந்தது.

 வட்ட மேசை மாநாடு

1927ஆம் ஆண்டு ”பகிஸ்கரிக் பாரத்” என்ற இதழை தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக எழுதி வந்தார் அம்பேத்கர். அதே ஆண்டு தீண்டாமைக்கு எதிராக போராட துவங்கினார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

பொது கிணற்றில் நீர் எடுப்பது, கோவில்களில் அனுமதி மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.

1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்.

அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.

தனி உரிமை - காந்தி எதிர்ப்பு

அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் கடுமையாக வலியுறுத்தினார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

1932ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடத்தப்பட்டது. அதற்கு அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், தாழ்த்தப்பட்டோருக்கு தனி உரிமை வேண்டும் என்று கோரினார், அதை காந்தி எதிர்த்தார்.

பூனா ஒப்பந்தம்

இதன் விளைவாக செப்டம்பர் 24 1932-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

1935ஆம் ஆண்டு அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் அவர் இரண்டு ஆண்டுகாலம் இருந்தார். பின் சுதந்திர தொழிலாளர் கட்சியை நிறுவினார். இந்த கட்சி 1937 ஆம் ஆண்டு மும்பை தேர்தலில் 14 இடங்களில் வென்றது.

அரசியலமைப்பின் வரைவுக் குழு

1936ஆம் ஆண்டு “யார் இந்த சூத்திரர்கள்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை குறித்து கடுமையாக எழுதினார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றுக்கொண்டபின், அரசியலமைப்பு எழுதும் பொறுப்பு அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அதில், சட்ட அமைச்சராகவும், அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

 இந்து நெறியியல் சட்டம்

1949ஆம் ஆண்டு நவம்பர் 26 நாள், அரசியல் அமைப்பு வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் 1950 ஜனவரி 26 அமல்படுத்தப்பட்டது.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

1951ஆம் ஆண்டு இந்து நெறியியல் சட்டம் கொண்டு வருவது குறித்து நேருவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பதவி விலகினார். பின் அடுத்த தேர்தலில், மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். அதில், தோற்றதை அடுத்து மாநிலங்களைவையில் நியமிக்கப்பட்டார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

திருமணம்

அவர், இறக்கும் வரை அந்த பொறுப்பை மட்டும் வகித்து வந்தார். 1906ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு 15வயது இருக்கும் போது 9 வயது ராமாபாய் என்பவருடன் திருமணம் நடந்தது.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

ராமாபாய் 1935ஆம் ஆண்டு இறந்தார். பின் 1948ஆம் ஆண்டு சாரதா கபீர் என்னும் சவிதா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது அம்பேத்கருக்கு வயது 57 சவிதாவுக்கு வயது 39.

மதமாற்றம்

இந்து மதத்தின் வறட்டுக் கொள்கைகள் என்று விமர்சித்த அம்பேத்கர்... 1956ஆம் ஆண்டு மே மாதம் புத்தமும் தம்மமும் என்ற நூலை அம்பேத்கர் எழுதி முடித்தார். அதன்பின் தான் புத்த மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்தார். அக்டோபர், 14ஆம் தேதி மதம் மாற முடிவு செய்தார்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

அக்டோபர் 15 அன்று மிகப் பெரிய பொதுக்கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், புத்த மதத்தைத் தழுவியது ஏன் என்பதை விளக்கினார். “மனித குலம் எப்போதுமே தன்னுடைய நடத்தை, செயல்பாடுகள் குறித்து சுயமாக சிந்தித்துப் பார்த்து அவற்றை மேம்படுத்தி வந்துள்ளது. அனைத்து வகை முன்னேற்றத்திற்கும் மதம் முக்கியமானதாக உள்ளது.

 பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்களைத் தவிர மற்றவர்கள் உற்சாகமடைய இந்து மதத்தில் ஏதுமில்லை. எனவேதான், மிக முக்கியமான இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இறப்பு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கருக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்,

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

தனது 65 வயதில் 1956 டிசம்பர் 6ஆம் தேதி தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே காலமானார்.

அவரது உடல் ‘‘தாதர் சவுபதி’’ கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. அம்பேத்கரின் மரணத்திற்கு பின், அவருக்குஇந்தியாவின் உயரிய விருதான ‘‘பாரத ரத்னா விருது’’ கடந்த 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அவருக்கு நிகர் அவரே

அம்பேத்கர் ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான்.

வெறும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்தான் இந்த அம்பேத்கரா..என்ன செய்துவிட்டார் அப்படி? | Facts About B R Ambedkar In Tamil

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.

ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால், அவன் அடிமைபட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும். பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - அம்பேத்கர்