டிபிஐ வளாகம் இனி.. பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் - முதலமைச்சர்

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu Chennai
By Sumathi Nov 30, 2022 10:28 AM GMT
Report

சென்னை டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

டிபிஐ வளாகம்

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் பேராசிரியர் அன்பழகன்.

டிபிஐ வளாகம் இனி.. பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் - முதலமைச்சர் | Dpi Campus Named As Prof Anbazhagan Cm Stalin

தலைசிறந்த கல்வியாளரான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை

அன்பழகன் கல்வி வளாகம்

ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

இதனால் முதலமைச்சர் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் அவர்களது நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’’ என்று அழைக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.