ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை : திமுகவின் முக்கியத் தலைவர்கள்
1949ஆம் ஆண்டு,செப்டம்பர் 18ம் நாள்,சென்னை,ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது,திமுகவின் தொடக்க விழாவுக்கு லட்சோபலட்ச தொண்டர்கள் கூடினர்.அப்போது பேசிய அண்ணா,"எங்கள் கட்சிக்கு தலைவர் பெரியர்தான்
,எனவே அவரது இடம் காலியாக வைக்கப்பட்டிருக்கும்" என்று அறிவித்தார். திமு கழகத்தின் பொது செயலாளராக அண்ணா(கா. ந. அண்ணாதுரை) தேர்ந்தெடுக்கபட்டார்.தொண்டர்கள் அனைவரையும் 'தம்பி' என்று பாசமாக அழைப்பார் அண்ணா,எனவே தான் தொண்டர்கள் 'அண்ணா' என்று அழைக்கின்றனர்.
இந்த நிலையில் திமுகவின் முக்கிய தலைவர்கள் குறித்து தற்போது காண்போம்
அண்ணா :
1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா பெரியாரின் கொள்கையினால் ஈர்க்கபட்டு திராவிட கழகத்தில் இணைந்தார் .
அப்போது பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தினர். அண்ணா அதன் பொதுச் செயலாளர் ஆனார். பெரியார் இந்த புதிய கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் 1962-ம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. ஆனால், அண்ணா தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களால் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது.
அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார். நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன்.
நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில்அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று குறிப்பிட்டார். 1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது.
அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார்.
மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார் அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் போது பிப்ரவரி, 1969 அன்று காலமானார்.
பேராசிரியர் அன்பழகன்
திமுக பொதுச்செயலாளர், கருணாநிதியின் உற்ற நண்பர், முதுபெரும் திராவிட இயக்கத் தலைவர் க.அன்பழகன்திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற தோழரான அன்பழகன் பிறந்ததும் கருணாநிதி பிறந்ததும் ஒரே மாவட்டம்தான்.
திருவாரூர் திருக்குவளையில் கருணாநிதியும், காட்டூரில் அன்பழகனும் பிறந்தனர். கருணாநிதியைவிட 2 வயது மூத்தவர் அன்பழகன். எனக்கு அண்ணன் இல்லை அதனால் அன்பழகனை என் அண்ணனாகப் பார்க்கின்றேன் என்றார் கருணாநிதி. 1977-ம் ஆண்டு முதல் 43 ஆண்டு காலம் திமுகவின் பொதுச்செயலாளராக மிக நீண்டகாலமாக கட்சிப் பணியாற்றி வந்தார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான நண்பர். ஸ்டாலின் அவரை எப்போதும் பெரியப்பா என்றுதான் அழைப்பார். ஸ்டாலின், தனது தந்தைக்கு அடுத்து மிகவும் மதிக்கக்கூடிய தலைவர் அன்பழகன். தந்தையிடம் குறிப்பிட முடியாத விஷயங்களை பெரியப்பா அன்பழகன் மூலம் தந்தையிடம் கொண்டு செல்வார் என்று கூறுவார்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தில் 42 ஆண்டுகள் பொதுச்செயலாளராக பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன், வயது மூப்பு காரணமாக இன்று (07.03.2020) அதிகாலை மறைந்தார்
கருணாநிதி :
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கருணாநிதி, தனது 14வயதிலேயே பல்வேறு சமூக இயக்கங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு அரசியலில் நுழைந்தார். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான பல்வேறு போராட்டங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி.
இவர் துவங்கிய முரசொலி பத்திரிகை பின்னாளில் திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையானது. ஒருபுறம் முழுநேர அரசியல்வாதியாக இயங்கிக்கொண்டிருந்தாலும், தமிழ் திரையுலகிலும் கவனம் செலுத்தி பல்வேறு திரைப்படங்களில் வசனகர்த்தாவாக தனது திராவிட சித்தாந்தங்களை பரப்பினார்.
இவரது முதல் படமான இராஜகுமாரி 1947லிலும், கடைசிபடம் பொன்னர் சங்கர் 2011லிலும் வெளியானது. திருக்குறள் உரை, சங்கத்தமிழ், குறளோவியம்,தென்பாண்டி சிங்கம், ரோமாபுரி பாண்டியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உரைநடை மற்றும் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். தூக்குமேடை, மணிமகுடம், நானே அறிவாளி உள்ளிட்ட மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்
1957 குளித்தலை தொகுதியில் வென்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் கருணாநிதி.
1961 திமுக-வின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1962 தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆனார். 1967 தமிழ்நாடு அரசின் பொதுபணித்துறை அமைச்சரானார் கருணாநிதி.
1969 திரு. கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றார்" மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1971 இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் கருணாநிதி.
1989 தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார். 1996 தமிழ்நாடு அரசின் முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்றார்.
2006 தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றார் கருணாநிதி. 133அடி உயர திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் நிறுவியவர்.
வயோதிக பிரச்சனைகளால் உடலுறுப்புகள் செயலிழந்து, 07 ஆகஸ்ட் 2018ல் தனது 94வது வயதில் காலமானார் கருணாநிதி.
துரை முருகன் :
வழக்கறிஞர், அரசியல்வாதி, பேச்சாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவராக விளங்கும் துரைமுருகன், நான்காவது முறையாக தமிழக அமைச்சராகியிருக்கிறார்.
திமுக-வின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் அவர், சட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் பட்டம் பயின்றவர். தொழில்முறையில் வழக்கறிஞரான துரைமுருகன், அமைச்சராகப் பதவி வகித்த துறைகளில் ஆழ்ந்த அறிவு உடையவர்.
இன்றைய திமுக-வில்அதிக அனுபவமுள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், சட்டமன்றஉறுப்பினராகவும் நீண்டகால அனுபவம் உடையவர். காட்பாடியை அடுத்துள்ள காங்குப்பம் என்ற கிராமத்தில், 1938-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி பிறந்தவர் துரைமுருகன்.
தந்தை துரைசாமி, தாயார் தவசி அம்மாள். அரசியல் பின்னணியோ, பரம்பரைச் செல்வாக்கோ இல்லாத, பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாத அளவுக்கு இளமையில் வறுமை வாட்டிய குடும்பச்சூழலில் வளர்ந்தவர் துரைமுருகன்.
கல்லூரி காலத்தில் படிக்க வசதியற்ற துரைமுருகனுக்கு பணம் கொடுத்து உதவியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கியபோது துரைமுருகனையும் தன்னுடன் வருமாறு அழைத்தார்.
ஆனால், "நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய தலைவர் கலைஞர்தான்" என்று துரைமுருகன் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்து கருணாநிதி பக்கம் உறுதியுடன் நின்றார். அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், அவருக்கு எதிராக சட்டசபை விவாதங்களில் அனல் கக்கியவர்.
தி.மு.க சார்பில், காட்பாடியில் முதன்முறையாக 33-வது வயதில் அவர், 1971-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1977, 1980-ம் ஆண்டுகளில், இவர் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
பின்னர் மீண்டும்1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 மற்றும் தற்போது 2021-ம் ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 1984 மற்றும் 1991 ஆண்டு தேர்தல்களில் மட்டும் தோல்வியடைந்தார்.
மேடைப்பேச்சுகளில் இவருக்கு சிரிக்கவைக்கவும் தெரியும், அழ வைக்கவும் தெரியும். அடுத்தவரை நையாண்டி பண்ணுவதில் அலாதியான கற்பனைத் திறனும் உண்டு துரைமுருகனுக்கு. தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என உயர்ந்து, தற்போது பொதுச்செயலாளர் எனக் கட்சியின் உயரிய பொறுப்பையும் வகிக்கிறார். தற்போது அவருக்கு நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார் .
மு.க ஸ்டாலின் :
மு.க.ஸ்டாலின் என பரவலாக அறியப்படும் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் ஆவார். 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியின் தலைவராக போட்டியிட்டு, வெற்றிபெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
இவர் திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவரும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர்.மு.கருணாநிதி மற்றும் அவரது இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கும் 1 மார்ச் 1953ல் மூன்றாவது மகனாக பிறந்தார். கருணாநிதியின் அரசியல் வாரிசாக அவரால் அறிவிக்கப்பட்டார் ஸ்டாலின் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
அரசியல் பாதை :
2016 : சென்னை கொளத்தூர் தொகுதியில் இருந்து மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் வலுவான எதிர்கட்சியின் சார்பில் எதிர்கட்சி தலைவரானார்.
2017 : திமுகவின் செயல்தலைவராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு, அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 : சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியின் தலைவராக போட்டியிட்டு, வெற்றிபெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
மா.சுப்பிரமணியன் :
மா. சுப்பிரமணியம் அப்போதைய வட ஆற்காடு மாவட்டம், வாணியம்பாடிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். பின்னர் இவரது குடும்பமானது சித்தூர் அருகில் உள்ள புல்லூர் கிராமத்தில் குடியேறியது.
இவர் அங்கேயே தன் துவக்கக் கல்வியை பயின்றார். பின்னர் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. 1976 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1996-2006 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். திமுக இளைஞர் அணியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் இவர் ஸ்டாலினின் ஒரு தீவிர ஆதரவாளர்.
இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார். மீண்டும் திமுக வேட்பாளராக 2011 இல் மேயர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அதிமுகவின் சைதை சா. துரைசாமியிடம் தோல்வியடைந்தார்.
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார்.
இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு (மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலன்) அமைச்சசராக பதவியேற்றார்
கனிமொழி :
தொழில்முறை பத்திரிகையாளர் மற்றும் கவிஞரான கனிமொழி, 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற மேலவைக்கு திமுக உறுப்பினராக தேர்த்தெடுக்கப்பட்டதனமூலம் அரசியலில் அடியெடுத்துவைத்தார்.
திமுகவின் இலக்கிய அணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், கலை,இலக்கியம் மற்றும் பகுத்தறிவு ஆகியவை குறித்து சிறப்பாக பேசக்கூடிய கனிமொழி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சிறந்த தலைவர் என அரசியல் அரங்கில் தனது பெயரை பதியவைத்துள்ளார்.
இவர் தி இந்து தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியினமகளான இவர், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் முன்னாள் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சகோதரி ஆவார். தமிழகத்தின் தனிப்பெரும் பெண் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள கனிமொழி,
சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற விருதை துணை ஜனாதிபதி திரு.வெங்கைய நாயுடுவின் கைகளால் பெற்றுள்ளார். அரசியல் பாதை 2005 : அரசியலில் நுழைவதற்கு முன்னர், குமுதம் -தமிழ் வார இதழின் பொறுப்பு ஆசிரியராகவும், தி இந்து பத்திரிக்கையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ் செய்தித்தாளான தமிழ் முரசுவின் சிறப்பு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
2007 : ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனவு மொழி, 2009 ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.
2009 : வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற வளாக உணவு மேலாண்மை கூட்டு குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 2010 கிராமப்புற மேம்பாடு தொடர்பான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக பணியாற்றினார் கனிமொழி.
2012 உள்துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராக பணியாற்றிய கனிமொழி, மனித வள மேம்பாட்டு துறையின் கட்டாயகல்வி சட்டத்தின் செயலாக்க துணை குழு உறுப்பினராக ஆகஸ்ட் 2012 முதல் பணியாற்றினார்.
2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆ.ராஜா :
தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆண்டிமுத்து ராஜா, மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடுத்துக்கொண்டு பின்னர் தி.மு.க.வில் இணைந்தார்.
பெரம்பலூர் தொகுதியில் இருந்து மூன்று முறை மற்றும் நீலகிரிலிருந்து ஒரு முறை என தொடர்ந்து நான்கு முறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். வாஜ்பாயியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர்.
அரசியல் பாதை :
1996 - பெரம்பலூர் தொகுதியிலிருந்து திமுக வேட்பாளராக 11 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, சுமார் 2,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் பி.வி.சுப்பிரமணியன்-ஐ தோற்கடித்தார்.
1999 - வாஜ்பாயின் மந்திரிசபையில் ஊரக வளர்ச்சித்துறையின் மத்திய அமைச்சராக பணியாற்றினார்.
1999 - மீண்டும் பெரம்பலூரில் இருந்து 13 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராசா, இம்முறை அதிமுகவின் ராஜரத்தினத்தை தோற்கடித்தார். 2000-மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்
2004 - மத்திய அமைச்சரவையில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2004- அதிமுகவின் டாக்டர்.சுந்தரம்-ஐ தோற்கடித்து 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007 - மத்திய அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானார்.
2009 - மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரானார்.
2009- நீலகிரி தொகுதியில் இருந்து 15 வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராசா, அங்கு மதிமுகவின் சி.கிருஷ்ணன்-ஐ 85,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2014 - 16 வது மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சி.கோபால கிருஷ்ணனிடம் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் .
உதய நிதி ஸ்டாலின் :
உதயநிதி ஸ்டாலின்தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். அதோடு ரெட் ஜெயன்டு மூவிஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள இவர் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார்.இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார்.
2019 ஜூலை 7 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி :
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மூத்த மகனும், முன்னாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அமைச்சர் அன்பில் ப. தர்மலிங்கத்தின் பேரனுமாவார்.
இவரது மாமா அன்பில் பெரியசாமியும் ஓர் அரசியல்வாதி ஆவார். திமுக கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நண்பர் ஆவார்.
இரு குடும்பங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் நட்பு அன்பில் பி. தர்மலிங்கம், மு. கருணாநிதி காலம் தொடங்கி; தந்தையர் அன்பில் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின்; இப்போது மகன்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் என மூன்று தலைமுறைகளாக தொடர்கிறது.
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்ற 16வது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2021 மே மாதம் ஏழாம் தேதி அன்று பதவியேற்றார்.
கே. என். நேரு :
கே.என் .நேரு நவம்பர் 9, 1952 ஒரு தமிழக அரசியல்வாதியும் தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளவரும் ஆவார். திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராக உள்ளார்.
கே. என் .நேரு கடந்த 1989 முதல் 1999 வரை திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத்துறை, பால்வளத்துறை, செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது உணவுத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து பின்னர் 2006 முதல் 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார் .
2008 முதல் 2009 வரை இடைப்பட்ட காலத்தில் விவசாயத் துறை அமைச்சராக இருந்தார், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலுக்கு பின் அமைந்த திமுக அமைச்சரவையில் 2021 மே 7 அன்று தமிழக நகர்ப்புள வளர்ச்சித்துறை (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்) அமைச்சசராக பதவியேற்றார்.
நெய்குளம் கிராமத்தில் 9 நவம்பர் 1952 ஆம் ஆண்டு பிறந்தார், ஆரம்ப காலத்தில் 1986 ஆண்டு தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி யூனியன் தலைவராக இருந்துள்ளார் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல் திருச்சி கலைஞர் அறிவாலயம் பிரமாண்டமான முறையில் கட்டினர்
கே. என் .நேரு இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார்
டி.ஆர் பாலு:
ஜூன் 1, 1941 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டையில் பிறந்த டி.ஆர் .பாலு சென்னையில் உள்ள மைய பல்தொழில் நுட்பப் பயிலத்தில் தொழிற்கல்வியும், பின்னர் புதுக்கல்லூரியில் பி. எஸ். சி படிப்பையும் படித்து முடித்தார்.
இவருக்கு ரேனுகா தேவி மற்றும் டி. ஆர். பி. பொற்கொடி என இருமனைவிகளும், ஆர். பி. ராஜ்குமார், டி. ஆர். பி. ராஜா, செல்வகுமார் பாலு என மூன்று மகன்களும் மற்றும் இரு மகள்களும் உள்ளனர்.
அரசியல் பாதை : தனது பதினாறாம் வயதில் திமுகவில் இணைந்த டி.ஆர் பாலு 1982 ஆம் ஆண்டு தி.மு.க.வின் சென்னை நகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். பின்னர் பெட்ரோலிய துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலிலும், 2004 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
பின்னர் 2009 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசில் கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.