வரதட்சனை கொடுமை: 1 நாளில் 20 பெண்கள் மரணம் - பகீர் அறிக்கை!
இந்தியாவில் 5 ஆண்டுகளில் 35ஆயிரத்திற்கும் மேலான பெண்கள் வரதட்சனை கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.
வரதட்சனை கொடுமை
டெல்லியில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வரதட்சணை கொடுமை தொடர்பாக விரிவான புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

அதன்படி, நாட்டில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்களும்,
மரணங்கள்
அடுத்தபடியாக பீகாரில் 5,354 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 2,859 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும், மேற்கு வங்கத்தில் 2,389, ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்களும், தென் மாநிலங்களை பொறுத்தவரை
தமிழ்நாட்டில் 198, கேரளா 52, கர்நாடகா 934 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில் சராசரியாக நாள்தோறும் 20 வரதட்சணை மரணங்கள் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.