கொழுந்தன் தொல்லை... வரதட்சனை கொடுமை - கடப்பாரையால் கதவை உடைத்து போராடிய பெண்

Tamil nadu Sexual harassment Crime
By Sumathi Sep 24, 2022 07:47 AM GMT
Report

மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில், அவர் வீட்டை உடைத்து போராட்டம் நடத்தியுள்ளார்.

 பாலியல் தொல்லை 

திருவாரூர், பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தல் தெற்குவெளியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் நிலையில் பிரவீனாவை தனியாக வீட்டில் விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

கொழுந்தன் தொல்லை... வரதட்சனை கொடுமை - கடப்பாரையால் கதவை உடைத்து போராடிய பெண் | Dowry Victim Women Lock Home Breaks Into House

இதனையடுத்து திருமணமான மூன்றே மாதங்களில் நடராஜன் குடும்பத்தினர் மேலும் வரதட்சனை கேட்டு பிரவீனாவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும் கணவர் வீட்டில் இல்லாத நிலையில் கணவரின் தம்பி சதீஷ், பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

வரதட்சனை கொடுமை 

இதனை பிரவீனா தன் கணவரிடம் கூறியபோது அவரை நம்பாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்டுகொண்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனையடுத்து நடராஜன் குடும்பத்தினர், பிரவீனாவை அவர் வாழ்ந்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜிடம் அந்த பகுதி பொதுமக்களுடன் சென்று பிரவீனா ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- எனக்கும், மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த நடராஜனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.\

புகார் 

திருமணத்தின்போது எனது பெற்றோர் 24 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வழங்கினர். இந்த நிலையில் என்னை கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு எனது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துகின்றனர். கூடுதல் வரதட்சணை கொடுக்காவிட்டால் உனது கணவர் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டார் என்று கூறுகின்றனர்.

மேலும் என்னை கணவர் வீட்டில் சேர்க்காமல் வீட்டை பூட்டி விட்டு அனைவரும் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் கடந்த 20 நாட்களாக கணவர் வீட்டு வாசலில் தான் நான் தங்கி உள்ளேன்.

ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் பேசியும் என்னை வீட்டுக்குள் சேர்க்க மறுக்கின்றனர். ஆகவே நான் எனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன்னை கணவர் குடும்பத்தினர் வீட்டில் வசிக்க அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த பிரவீனா நேற்று கடப்பாரையால் கணவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று குடியேறினார்.