600 சவரன் நகை, ஆடி கார்; கணவர் வீடியோ எடுப்பாரு - முன்னாள் MLA மீது மருமகள் புகார்!

Tamil nadu AIADMK Marriage
By Sumathi Feb 22, 2024 07:03 AM GMT
Report

முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் மீது மருமகள் வரதட்சணை புகார் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை கொடுமை

அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் கே.பி.கந்தன். இவரது மகன் கே.பி.கே. சதீஷ்குமார் சென்னை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராகவும், சென்னை மாநகராட்சியின் 182 வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

திருமணத்தில் எடப்பாடி

2018ல் சதீஷ்குமாருக்கும், ஸ்ருதி பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ருதி நுரையீரல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையில், திருமணத்திற்கு ஆயிரம் சவரன் நகைகளை வரதட்சணையாக வழங்க வேண்டும் என கே.பி.கந்தன் குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ரூ.1413 கோடி சொத்து, இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ யார் தெரியுமா? - லிஸ்ட் ரெடி!

ரூ.1413 கோடி சொத்து, இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ யார் தெரியுமா? - லிஸ்ட் ரெடி!

மருமகள் புகார் 

தொடர்ந்து, 600 சவரன் நகைகளை வழங்கியுள்ளனர். இதில் 100 சவரன் நகைகள் சதீஷ்குமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1.65 கோடி மதிப்புள்ள இரண்டு சொகுசு கார்கள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

வரதட்சணை

இந்நிலையில், மீதமுள்ள 400 சவரன் நகைகளை வரதட்சணையாக கொண்டு வர வேண்டும் என கே.பி.கந்தன் குடும்பத்தினர் ஸ்ருதியை தொடர்ந்து வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், கணவர் அடித்துவிட்டு அதனை வழுக்கி விழுந்ததாக கூற சொல்லி வீடியோ எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஸ்ருதி மற்றும் அவரது தந்தை, முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன், அவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார், மனைவி, மகள் ஆகியோர் மீது புகாரளித்துளனர்.