பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்...மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்! எந்த ரூட் தெரியுமா?

Tamil nadu Governor of Tamil Nadu Chennai
By Swetha Jul 15, 2024 09:50 AM GMT
Report

சென்னை சாலைகளில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் வலம் வர உள்ளது.

டபுள் டக்கர் பேருந்து

கடந்த 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு டபுள் டக்கர் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. சென்னையை பொருத்தவரை ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து இருந்தும், பேருந்து பயணிகள் அதிகம் உள்ளனர். இதனால், பஸ்களில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகின்றது.

பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்...மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்! எந்த ரூட் தெரியுமா? | Double Decker Buses Arrives Soon On Chennai Roads

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு ஏசி பஸ், டீலக்ஸ் போன்றவை இயங்குகின்றது. அந்த வகையில், தான் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் எனப்படும் இரட்டை அடுக்கு பஸ்களை இயக்க சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக 18 ஏ ரூட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் வரை 2008 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. ஆனால், அந்த வழித்தடத்தில் பாலங்கள் கட்டும் பணி, மெட்ரோ பணி போன்ற காரணங்களால் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது .

மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடக்கம் - எந்த பகுதிகளில் தெரியுமா?

மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடக்கம் - எந்த பகுதிகளில் தெரியுமா?

சூப்பர் நியூஸ்..

இந்த நிலையில், மீண்டும் சென்னையில் இரட்டை அடுக்கு பஸ்களை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்சாரத்தில் இயங்க கூடிய வகையில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்...மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்! எந்த ரூட் தெரியுமா? | Double Decker Buses Arrives Soon On Chennai Roads

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் சென்னை நகர கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்கள் வாங்கப்பட உள்ளதாம். மும்பையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் முதல் ஏசி இரட்டை அடுக்கு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது.

விரைவில் பெங்களூரில் இந்த பேருந்துகள் அறிமுகம் செய்யப்ப்பட உள்ளன. தற்போது சென்னையிலும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் தகவல், பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.