மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடக்கம் - எந்த பகுதிகளில் தெரியுமா?

Tamil nadu Chennai
By Vinothini Aug 05, 2023 04:36 AM GMT
Report

சென்னையில் டபுல் டக்கர் பஸ் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டபுல் டக்கர்

சென்னையில் 1997 முதல் 2008 வரை டபுள் டக்கர் பஸ் என கூறப்படும் அடுக்குமாடி பேருந்து சேவை இருந்தது. பின்னர், சில காரணங்களால் அந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்பொழுது மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.

double-decker-bus-in-chennai

அதன் தொடர்ச்சியாக பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

பகுதிகள்

இந்நிலையில், சென்னையில் அடுக்குமாடி பேருந்துகள், மின் கம்பிகள் இல்லாத, தாழ்வான மரங்கள் இல்லாத சாலைகளான அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.