வடிவேலு பத்தி நா பேச விரும்பல..! பொதுமேடையில் வெளுத்துவாங்கிய ராதிகா..!

Raadhika Vadivelu
By Karthick Jan 09, 2024 02:30 PM GMT
Report

நடிகர் வடிவேலு குறித்து நடிகை ராதிகா நேரடியாக மேடையில் தெரிவித்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.

வடிவேலு

தொடர்ந்து வடிவேலு குறித்து அவருடன் நடித்த பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலும் அந்த கருத்துக்கள் எதிர்மறையானதே தான்.

dont-want-to-talk-about-vadivelu-rathika-in-stage

அவருடன் காமெடி காட்சிகளில் நடித்த பலரும் இவ்வாறு விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், அண்மையில் மறைந்த விஜயகாந்தின் மறைவிற்கு கூட வராமல் இருந்து வடிவேலு, கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு மட்டும் வருகை தந்திருந்தார்.

காலணி வீசினது தவறு தான் ஆனாலும்...! விஜய் சம்பவம் - அதிரடியாக சொன்ன விஷால்..!

காலணி வீசினது தவறு தான் ஆனாலும்...! விஜய் சம்பவம் - அதிரடியாக சொன்ன விஷால்..!


நா பேச விரும்பல

இது பெரும் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், வடிவேலு குறித்து ராதிகா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் வடிவேலுவை பற்றி நான் பேச விரும்பவில்லை என்ற அவர், கடைசியாக அவரை விமானத்தில் சந்திதாக குறிப்பிட்டு, அப்போது வடிவேலுவிடம் சரத்குமார் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன் என்றார்.

dont-want-to-talk-about-vadivelu-rathika-in-stage

அந்த சமயத்தில் தனது மகன் ராகுல் வடிவேலுவிடம், எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறி, நீங்கள் எங்கள் அப்பா படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டான் என்ற ராதிகா, ஆனால் அதற்கு வடிவேலு, சிரித்துக்கொண்டே அரசியல்வாதிகளுக்கு எல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை ப்பா என்றார் என கூறினார் ராதிகா.