இனி இந்த மாத்திரைகளை சாப்பிடாதீர்கள் - பகீர் எச்சரிக்கை!
மாத்திரைகளில் தரம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டிபயாடிக்
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா பட்டேல் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பகிர்ந்துள்ள தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
அவர் கூறுகையில், “இந்துஸ்தான் ஆண்டிபயாடிக் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் போன்றவைகள் பாராசூட்மல் மாத்திரைகளை தயாரிக்கிறது.
தரம் குறைவு
ஆனால் இதில் மெட்ரானிடசோல் 400 மிகி, பாராசிட்டமால் 500 மிகி மாத்திரைகள் போன்றவைகள் தரமானதாக இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த செப்டம்பர் மாதம் கால்சியம், விட்டமின் டி3 மாத்திரைகள், நீரிழிவு நோய் மாத்திரைகள், இரத்த உயர் அழுத்த மாத்திரைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சோதனை செய்ததில், தரச் சோதனையில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.