தங்கத்தை விட இனி இந்த உலோகத்தின் தேவைதான் அதிகம் - எது தெரியுமா?
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலோகத்தின் தேவைதான் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
துத்தநாகம்
இந்தியாவில் பித்தளை, வெள்ளி, அலுமினியம் போன்ற உலோகங்களில் பயன்படுத்தப்படும் துத்தநாகத்தின் (Zinc) நுகர்வு வேகமாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பேசிய IZA நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரூ கிரீன், "இந்தியாவில் துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவை 11 லட்சம் டன்கள் ஆகும். இது இந்தியாவில் தற்போதைய உற்பத்தியை விட அதிகம். அடுத்த 10 ஆண்டுகளில் இது 20 லட்சம் டன்னை எட்டும் வாய்ப்பு உள்ளது.
தேவை அதிகரிப்பு
தங்கத்தை விட துத்தநாகத்தின் நுகர்வு பல மடங்கு அதிகம் என்பதுதான் இதன் சிறப்பு. இந்தியாவில் தங்கத்தின் நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் 700 டன்களுக்கும் அதிகமாக உள்ளது. துத்தநாகத்தின் தனிநபர் பயன்பாடு குறித்து பார்க்கும்போது, உலகளாவிய சராசரியில் இது இந்தியாவில் உள்ள பயன்பாட்டை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகம்.
எஃகு துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் துத்தநாகம் 23 சதவீதம் மட்டுமே. Galvanized rebar தரநிலையை அமைக்க அரசாங்கத்துடன் பேசி வருகிறோம்.
சூரிய ஆற்றல் பயன்பாடுகளில் துத்தநாகத்திற்கான தேவை உலகளவில் 43 சதவிகிதம் வளரும் என்றும், காற்றாலை ஆற்றல் துறை 2030ஆம் ஆண்டு இரட்டிப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.