அதெல்லாம் வதந்தி..! அதிமுகவுடன் கூட்டணி - அன்புமணி ராமதாஸ் கரார்..!
நாடாளுமன்ற தேர்தலை குறித்து இன்னும் தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் சரிவர முடிவாகவில்லை.
கூட்டணி
எதிர்க்கட்சியான அதிமுக தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை மீண்டும் தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முனைப்பில் இருக்கும் சூழலில், தற்போது வரை பெரிதாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதிமுக கட்சியிடம் பாமக சில நாட்களாக பேசி வருவதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இன்று நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவின் கூட்டனிக்கு கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், அதிமுக கூட்டணி குறித்து பாமகவின் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது வரை யாருடனும் கூட்டணி உறுதியாகவில்லை; கூட்டணி தொடர்பான பா.ம.க. நிலைப்பாட்டை நாங்கள் விரைவில் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்தார்.