ஒன்றிய அரசே..தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாதீர்கள் - கொதித்தெழுந்த கனிமொழி!

Smt M. K. Kanimozhi Smt Nirmala Sitharaman Tamil nadu Social Media
By Swetha Sep 13, 2024 09:30 AM GMT
Report

தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

ஒன்றிய அரசே..

கோவை மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டம் னடைபெற்றது. அதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு தொழில் துறைகளின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது கோவை அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளர் சீனிவாசன் இனிப்புக்கு 5 சதவீதம்,

ஒன்றிய அரசே..தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாதீர்கள் - கொதித்தெழுந்த கனிமொழி! | Dont Spoil Tamils Self Esteem Kanimozhi Warns

காரத்திற்கு 12 சதவீதம் வரிவிதிப்பு இருக்கிறது என்றும் இதனை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஜி.எஸ்.டி தொடர்பாக அவர் கோரிக்கை வைத்த விதம் அந்த அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலானது.

இஸ்லாமியர்கள் இந்து கோவில்களை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா? கொந்தளித்த கனிமொழி!

இஸ்லாமியர்கள் இந்து கோவில்களை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா? கொந்தளித்த கனிமொழி!

கனிமொழி

இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ்.டி. குறித்து பேசிய அன்னபூர்ணா சீனிவாசன், மன்னிப்பு கேட்டதாக தற்போது வீடியோ வைரலாகி வருகிறது. நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோவுக்கு கனிமொழி எம்.பி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசே..தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாதீர்கள் - கொதித்தெழுந்த கனிமொழி! | Dont Spoil Tamils Self Esteem Kanimozhi Warns

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும். என்றார். மேலும், பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ - என்ற திருக்குறளையும் குறிப்பிட்டுள்ளார்