இஸ்லாமியர்கள் இந்து கோவில்களை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா? கொந்தளித்த கனிமொழி!
வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்புக்கு இடையே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின் படி வக்பு வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத மற்ற மதத்தினரும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசுகையில்,
சிறுபான்மை மதத்தினர், அரசமைப்பு, சமூகநீதி உள்ளிட்டவற்றுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது குற்றம்சாட்டினார்.அரசு அமைப்பு சட்டத்தில் உள்ள பிரிவுகள் 25, 26, ஆகியவற்றை மீறுவதாக சட்ட திருத்தம் உள்ளது என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி
வக்பு வாரிய சட்டத்திருத்தம் மனித உரிமைக்கு எதிரானது என்றும் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டினார். மேலும் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் குறிப்பிட்ட மதத்தை டார்கெட் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள கனிமொழி,
இந்த சட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.இந்தியா மத சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள் என்றும் எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும் என்றும் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு சொத்துக்கள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கது அல்ல. மேலும் இந்து கோவில்களை நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறை போன்ற அமைப்புகளில்,
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அனுமதிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். மற்றவர்களின் மத நம்பிக்கையில் மட்டும் ஏன் தலையிட வேண்டும் என்றும் மத்திய அரசை சாடினார்.