Sunday, May 4, 2025

கல்வியை வைத்து அரசியலா..எடப்பாடி பழனிசாமி இப்படி செய்ய வேண்டாம் - அன்பில் மகேஷ் காட்டம்!

Tamil nadu Edappadi K. Palaniswami Anbil Mahesh Poyyamozhi
By Swetha 8 months ago
Report

கல்வியை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்ய வேண்டாம் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,

கல்வியை வைத்து அரசியலா..எடப்பாடி பழனிசாமி இப்படி செய்ய வேண்டாம் - அன்பில் மகேஷ் காட்டம்! | Dont Play Politics In Education Anbil Mahesh Warns

கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளை இணைப்பை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 24-ந் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று 2023-24 ம் ஆண்டு அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்தவர்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பு வந்த பின் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து இருக்கின்ற அமைச்சர்கள் கருத்துக்களை என்னிடம் வழங்கினார். அதுகுறித்து அறிக்கை உள்ளது. ஆனால் எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.

மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

எடப்பாடி பழனிசாமி 

பல அமைப்புக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதை எயல்லாம் தொகுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இறுதியாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போரட்டம் நடத்தலாம்.

கல்வியை வைத்து அரசியலா..எடப்பாடி பழனிசாமி இப்படி செய்ய வேண்டாம் - அன்பில் மகேஷ் காட்டம்! | Dont Play Politics In Education Anbil Mahesh Warns

ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் வியூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானது அல்ல. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் வியூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானது அல்ல.

கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் முடிவெடுத்த பின் தங்களின் கருத்தக்களை தெரிவிக்கலாமே தவிர யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து.

கல்வி அரசியலா..

அரசு பள்ளிகளில் உள்ள ஐடெக் லேப்களில் தனியாக ஆசிரியர் தேவை என்பதை நானும் உறுதி செய்கிறேன். 3 ஆண்டுகளில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதுடன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்

கல்வியை வைத்து அரசியலா..எடப்பாடி பழனிசாமி இப்படி செய்ய வேண்டாம் - அன்பில் மகேஷ் காட்டம்! | Dont Play Politics In Education Anbil Mahesh Warns

மட்டுமே தருவேன் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள். இதில் எதிர் கட்சித் தலைவர் எந்த குரலும் கொடுக்காத நிலையில் இறுதி முடிவு எடுக்காத ஒரு விஷயத்திற்கு போராட்டம் என்பது தேவையில்லாதது.

எடப்பாடி பழனிசாமி 2026-ம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்போதே அரசியல் செய்ய நினைக்கிறார். ஆர்ப்பாட்டம்-பேராட்டத்தை கைவிடுங்கள். தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார். என்று தெரிவித்துள்ளார்.