காதலர் தினத்தை கொண்டாடாத நாடுகள் இருக்கிறது தெரியுமா - ஏன்?
காதலர் தினத்தை கொண்டாடாத நாடுகளின் பட்டியலை தெரிந்துக் கொள்வோம்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும், பல நாடுகளில் காதலர் தினம் பரவலாகக் கொண்டாடப்படுவதில்லை. கலாச்சார சீர்கேடு என காதலர் தினத்தை தடை செய்கின்றனர்.
ஆப்கானிஸ்தான்
கலாச்சார விதிமுறைகள் காரணமாக இந்த நாட்டில் பல ஆண்டுகளாக காதலர் தினம் பரவலாக கொண்டாடப்படுவதில்லை.
ஈரான்
இது மேற்கத்திய கலாச்சார செல்வாக்காகவும் மக்களை சீரழித்துவிடும் என்றும் கருதப்படுகிறது.
சவுதி அரேபியா
இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு என்பதால், தடை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்
கலாச்சார மற்றும் மத உணர்வுகள் காரணமாக இது பரவலாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
கத்தார்
பொது கொண்டாட்டங்கள் இங்கு அனுசரிக்கப்படுவதில்லை.
மேலும் மலேசியா, சோமாலியா, மவுரித்தேனியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை.