அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை எடுத்துக்கொண்ட ட்ரம்ப் - 7 குற்றச்சாட்டுகள் பதிவு!
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ட்ரம்ப் முக்கிய ஆவணங்களை எடுத்ததாக குற்றம் சட்டப்பட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் 2014-ல் இருந்து தொடர்ந்து 4 முறை தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக இருந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு வெள்ளைமாளிகையை காலி செய்த ட்ரம்ப் கையேடு முக்கிய ஆவணமான 'க்ளாஸிஃபைட் டாக்குமென்ட்ஸ்' என்ற மிகமுக்கியமான ஆவணத்தை எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
இந்நிலையில், கடந்த ஆண்டு இவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, அப்பொழுது மீண்டும் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே இவ்வாறு செய்வதாக கூறினார்.
அதன்பிறகு இவர் ஏற்கெனவே ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் சிக்கியிருக்கிறார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் இப்போது இரண்டாவதாக ஒரு வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.