ஆவணங்களை திரும்ப பெரும் இபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு தொடரும் தோல்விகள்!

Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Vinothini May 22, 2023 06:32 AM GMT
Report

கடந்த ஆண்டு இபிஎஸ் இடம் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை திரும்ப பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலவரம்

கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி காலை இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டது. அப்பொழுது பொதுக்குழு தீர்ப்பு வர சில நிமிடங்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தினுள் அத்துமீறி பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

documents-taken-by-ops-will-be-handed-over-to-eps

அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்-ம் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்பொழுது இரு தரப்பினரும் சண்டை போட்டு கொண்டனர், அது கலவரமானது.

அதில் ஓ.பி.எஸ் தரப்பினர் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வழக்கு

இந்நிலையில், அங்கு எடுத்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை எல்லாம் ஓ.பி.எஸ் தரப்பினர் சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

documents-taken-by-ops-will-be-handed-over-to-eps

மேலும், இந்த பொருட்களைக் கேட்டு சி.வி சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் மனுதாரர் சி.வி சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அந்த ஆவணங்கள் இன்று மதியம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.