உலகின் அதிபயங்கர சிறைச்சாலை; நடுக்கடலில் திகில் - மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு
பழமையான சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அல்காட்ராஸ் சிறை
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது அல்காட்ராஸ் சிறை. இந்த பழைய சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அல்காட்ராஸ் சிறைச்சாலையை புனரமைத்துத் திறக்க உத்தரவிட்டுள்ளேன்.
அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக திகழும். சிறையைத் திறக்க சிறைத்துறை, நீதித்துறை, எஃப்பிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சிறைச்சாலை அமெரிக்கா மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை சிறைவைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்று அல்காட்ராஸ். 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த சிறைச்சாலை,கடலில் அமைந்துள்ளதால் அதைப் பராமரிக்கவே பெரிய தொகை செலவானது. மேலும், பழைய கட்டிடம் என்பதால் சிறையின் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்ததால் 1963-ம் ஆண்டு மூடப்பட்டது.
1972ல் இந்தச் சிறை அமெரிக்கத் தேசியப் பூங்கா சர்வீஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிறகு அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த சிறைச்சாலையின் மூன்று மாடி பிரதான கட்டிடத்தில் நான்கு சிறைத் தொகுதிகள், வார்டனின் அலுவலகம், வருகை அறை, நூலகம் மற்றும் ஒரு முடிதிருத்தும் கடை ஆகியவை இடம்பெற்றிருந்தன.
சிறையைச் சுற்றியுள்ள குளிர்ந்த கடல் நீர், வலுவான நீரோட்டங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சுறாக்களின் கூட்டம் ஆகியவை இதை தப்பிக்க முடியாத ஒரு கோட்டையாக மாற்றின. அமெரிக்க வரலாற்றில் அதிபயங்கரத் தீவிரவாதிகளாகக் கருதப்படும் ல்போன்ஸ் கபோன், ஜார்ஜ் "மெஷின் கன்" கெல்லி மற்றும் ராபர்ட் பிராங்க்ளின் ஸ்ட்ரூட் உள்ளிட்டோர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
