53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் - பேரழிவு ஏற்பட வாய்ப்பு
விண்கலம் விரைவில் பூமியில் விழ வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோவியத் விண்கலம்
கடந்த 1972ம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியன் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலனை அனுப்பியது. வெள்ளி மிகவும் சூடான் கிரகம். இதில் இப்போது வரை சோவியத் விண்கலன் மட்டுமே வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
தொடர்ந்து காஸ்மோஸ் 482 எனும் விண்கலமும் அனுப்பப்பட்டது. இது அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர் கோளாறு காரணமாக இது வெள்ளி கிரகத்திற்கு போகாமல் பூமியை சுற்ற தொடங்கியது.
பூமியில் விழ வாய்ப்பு
இந்நிலையில் இது மே 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை பூமியின் மீது மோதும். 453 கி.கி எடை கொண்ட இது மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பூமியில் விழ இருக்கிறது. வடக்கு 52 டிகிரி கோணத்தில் தொடங்கி, தெற்கு 52 டிகிரி கோணத்தில் விழும். இது விழுந்த இடத்தில் கட்டிடங்கள் இருந்தால் தரைமட்டம் ஆகிவிடும்.
காடு இருந்தால் காட்டுத்தீ ஏற்படும். கடலில் விழுந்தால் ஆபத்து குறைவு என எச்சரிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் - அமெரிக்கா, லண்டன் - இங்கிலாந்து, பாரீஸ் - பிரான்ஸ், டோக்கியோ - ஜப்பான்,
பெய்ஜிங் - சீனா, சிட்னி - ஆஸ்திரேலியா, சான்டியாகோ - சிலி, ஜோஹன்பர்க் - தென்னாப்பிரிக்கா இந்த நகரங்களுக்கு அருகில் விண்கலம் விழும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
