ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு..டொனால்ட் டிரம்ப் குற்றவாளி - அதிரடி தீர்ப்பு!
ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆபாச பட நடிகை
அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸூக்கும் டிரம்புக்கும் இடையே உறவு இருந்துள்ளது .இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டார்.
அப்போது டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.மேலும் இந்த விவகாரத்தைப் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் , டிரம்ப் அவருக்குப் பணம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து ஸ்டார்மி டேனியல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.இதையடுத்து அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப், வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் டிரம்புக்கு இந்த வழக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் குற்றவாளி
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வரும் 10ஆம் தேதி தண்டனை விவரம் குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கு, டிரம்ப் நேரிலோ அல்லது நடைமுறையிலோ ஆஜராகலாம் என்றுதகவல் வெளியாகி உள்ளது.குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.