துப்பாக்கிச்சூடு; நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை ஆனால்..மனம் திறந்த டிரம்ப்!
தனது மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பேசியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு
அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த தேர்தல் பேரணியின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் படு காயமடைந்தார்.
அதன்பிறகு, அவரது பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் முகத்தில் இரத்தத்துடன் மேடைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விஷயம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பியதையடுத்து, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார். அப்போது பேசிய அவர், இன்றுதொட்டு நான்கு மாதத்தில் (அதிபர் தேர்தலில்) நம் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம்.
மனம் திறந்த டிரம்ப்
நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர், பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார். மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விவரித்த அவர், 'எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, இருந்தபோதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார்.
கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன்.நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை.
ஆனால் கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்' என்று கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதிகாப்பு வீரருக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அவரது ஆதரவாளர்கள் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.