ஆபாச பட நடிகை அளித்த புகார்; குற்றவாளியான டொனால்ட் டிரம்ப் - தண்டனை விவரங்கள்?
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆபாச நடிகை புகார்
கடந்த 2006-ம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் (77). ஆபாச பட நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்ட் (எ) ஸ்டோர்மி டேனியல்ஸ் (45) என்றவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதனையடுத்து, 2016-ம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.
அப்போது அவர் ஆபாச பட நடிகையுடன் தனிமையில் இருந்த செய்தி பரவியது. இதனால் ஜெயிக்க முடியாமல் போய்விடும் என்று ரகசியத்தை காக்க அந்த நடிகைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை கொடுத்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும் வழக்கறிஞருக்கு பணம் செலுத்திய ஆவண பதிவுகளை மாற்றிய குற்றச்சாட்டின் வழியாக அந்த விவகாரம் மீண்டும் உருவெடுத்துள்ளது. நடப்பாண்டின் தேர்தல் களத்தில் டிரம்ப் உள்ள நிலையில் தற்போது, பணம் கொடுத்து மறைத்த விஷயம் வெளிவந்துவிட்டது.
இது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டது. மேன்ஹேட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி மெர்க்கன் அறிவித்துள்ளார். வருகிற ஜூலை 11ம் தேதி டிரம்ப்புக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.