ஆபாச பட நடிகை விவகாரம் - டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் சரண்
ஆபாச படம் நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
தனக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் நெருங்கிய ரகசிய உறவு இருப்பதாக ஸ்டார்மி டேனியல் பரபரப்பான தகவலை வெளியிட்டார்.
முதலில் இந்த குற்றச்சாட்டை மறுத்த டொனால்ட் டிரம்ப்.இந்த தகவலை ஸ்டார்மி டேனியல் வெளியில் கூறாமல் இருக்க இந்திய மதிப்பில் சுமார் ஒரு ரூ.1கோடியை டிரம்ப் வழங்கினார்.
நீதிமன்றத்தில் சரண்
இந்த பணம் அவரது தேர்தல் பிரச்சார கணக்கில் காட்டப்பட்டது.அமெரிக்கா சட்டப்படி இவ்வாறு முறைகேடான வணிக பரிமாற்றங்கள் செய்வது குற்றமாகும்.
கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற அவப்பெயரை பெற்றுள்ளார் டிரம்ப்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான தனது முயற்சியை முன்னதாக அறிவித்து தயாராகிக்கொண்டிருந்த நிலையில் டிரம்ப்பிற்கு இக்கட்டான சூழ்நிலையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
