இளம் வயது காதலனை கரம்பிடித்த டிரம்ப்பின் மகள் - திருமணம் கோலாகலம்!
டொனால்ட் டிரம்ப்பின் மகல் தனது காதலன் மைக்கேல் பவுலோஸை திருமணம் செய்துகொண்டார்.
டிப்பனி டிரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் டிப்பனி டிரம்ப்(29). இவர் மைக்கேல் பவுலோஸ்(25) என்பவரை காதலித்து வந்தார். டிப்பனி டிரம்ப் விடுமுறைக்காக லண்டன் சென்றிருந்தபோது, அங்கு முதன்முறையாக பவுலோஸை சந்தித்துள்ளார்.

மைக்கேல் பவுலோஸ் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக் கொண்டிருந்தார். லெபனான் நாட்டை சேர்ந்த செல்வந்தர் குடும்பத்தின் வாரிசுதான் அவர். கடந்தாண்டு ஜனவரியில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம்
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதில் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப், இவான்கா, எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், முன்னாள் மனைவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி மார்லா மேப்பில்சின் மகள் தான் டிப்பனி டிரம்ப்.
இவர்களது திருமணம் புளோரிடாவின் பாம் பீச்சில் விமர்சையாக நடைபெற்றது.