டொனால்ட் டிரம்ப் வீட்டில் FBI சோதனை : அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வீட்டில் நேற்று அமெரிக்க உளவுத்துறையான FBI சோதனை நடத்தியுள்ளது.
டிரம்ப் வீட்டில் சோதனை
அமெரிக்காவின் முன்னள் அதிபர் டெனால்ட் டிரம்ப் இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரூத் சோஷியல் நெட்வொர்க் எனும் தளத்திடம் பகிர்ந்துள்ள டிரம்ப் 2024ஆம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாக விரும்பாத தீவிர டெமாக்ரேட் கட்சியினரின் தாக்குதல். நீதி அமைப்பை ஆயுதமாக்கி உபயோகிக்கின்றனர் என சாடியுள்ளார்.
இது எதிர்கட்சியின் சதி
இந்த சோதனை குறித்து எஃப்பிஐ இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தேர்தலில் வெற்றி பெற்றதை கடந்த ஜனவரி 6ஆம் தேதி முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் பைடன் ஆதரவாளர்களைத் தாக்கினர்.
இது குறித்து ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வரும் நிலையில் FBI சோதனை நடத்தியுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.