தெருவில் நடந்துச் சென்ற சிறுமி; கடித்து குதறிய நாய்கள் - நெஞ்சை பதறவைக்கும் காட்சி!
தெருவில் நடந்து சென்ற சிறுமியை நாய்கள் சுற்றி வளைத்துக் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்கள் அட்டகாசம்
ஓசூர், வாசவி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் தேஜாஸ்ரீ(5). சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்றபோது, 3 நாய்கள் சிறுமியைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறின.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொதுமக்கள் கோரிக்கை
தொடர்ந்து, தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, பாலாஜி நகரில் சிறுவர், சிறுமிகள் உள்பட 7 பேரை தெருநாய்கள் கடித்து குதறின. மேலும், முனீஸ்வர் நகரில், ஒரு முதியவரை தெருநாய்கள் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது.