குப்பை தொட்டியில் கிடந்த 2 பெண் சிசுக்கள் - கடித்து குதறிய நாய்கள்

Death Dindigul
By Thahir Jul 30, 2023 08:35 AM GMT
Report

திண்டுக்கல்லில் குப்பை தொட்டியில் கிடந்த 2 பெண் சிசுக்களை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை தொட்டியில் பெண் சிசுக்கள்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள குப்பைத் தொட்டியை நாய்கள் சுற்றி வந்த படி இருந்துள்ளது.

அவ்வாழியாக சென்ற அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டு குப்பைத் தொட்டியை பார்த்த போது 2 பெண் சிசுக்கள் இருந்துள்ளன.

2 baby girls lying in a garbage can

இதுகுறித்து துாய்மை பணியாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து குப்பை தொட்டி உள்ள பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

நாய்கள் கடித்து குதறின

இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பெண் சிசு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குப்பை தொட்டியில் அருகே சிசுக்கள் கிடந்ததால் நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் ஒரு சிசுவின் தலையை காணவில்லை. போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் உள்ளதா? அதில் சிசுவை வீசிச் சென்றவர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.