பாத்ரூமில் இருந்து வந்த சத்தம்.. ஓட்டை வழியாக எட்டிப்பார்த்து சிக்கிக்கொண்ட நாய்!

Viral Video United States of America TikTok
By Vinothini Aug 15, 2023 06:34 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பெண் ஒருவர் வீட்டில் நாய் துளையில் சிக்கிக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாத்ரூமில் சத்தம்

அமெரிக்காவில் உள்ள டென்னிசி மாகாணத்தில் பிரபல டிக் டாக் பதிவராக உள்ள கைண்டல் பிரெட் உறங்கி கொண்டிருந்தார். அப்பொழுது இவரது வீட்டில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டை சுற்றி பார்த்துள்ளார், பின்னர் அவரது பாத்ரூமில் இருந்து சத்தம் கேட்டுள்ளது.

dog-stuck-in-tik-tokers-bathroom-in-america

அவரது வீட்டு பாத்ரூம் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு இருந்த ஒரு துளையில் நாய் ஒன்றின் தலை சிக்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு முதலில் பயந்த அந்த பெண் பிறகு அதன் மீது பரிதாபம் கொண்டார். அதற்கு உதவுவதற்காக பிறரை அழைத்தார், அதன்பிறகு அவரது கணவர் வந்துள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

இந்நிலையில், அந்த நாயின் கழுத்து அழுந்தாமல் இருக்க கொஞ்சம் துளை ஏற்படுத்தினார், பின்னர் கணவரும் இவரும் சேர்ந்து அந்த நாயை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட நாய்க்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து, வீட்டில் வெளிப்புற அறையில் தூங்க வைத்தனர்.

பின்னர் இந்த நாய் குறித்து அப்பெண் டிக் டாக்கில் பதிவிட்டார், இந்த வீடியோ ட்ரெண்ட் ஆனது. இந்த வீடியோவை பார்த்த அந்த நாயின் உரிமையாளர் வந்து நாயை மீட்டு சென்றனர்.

நாய் பத்திரமாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தகவல் குறித்தும் டிக் டாக்கில் அந்தப் பெண் வீடியோ வெளியிட்டார், இதனை பார்த்த இணையவாசிகள் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.