நாய்களை சாப்பிடும் குடியேற்றவாசிகள்..டிரம்ப் பேசுவதை கேட்டு நாய் செய்த சம்பவம் - viral video!
கொன்று சாப்பிடுவதாக டிரம்ப் பேசுவதை கேட்டு நாய் பயந்து நடுங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் கடந்த வாரம் விவாதத்தில் பங்கேற்றனர்.
அதில் நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசாரமாக விவாதித்தனர். இந்நிலையில் கமலா ஹாரிஸுடன் நடந்த விவாதத்திலும் டிரம்ப்பின் குடியேற்றவாசிகள் மீதான வெறுப்பு வெளிப்பட்டுள்ளது.
அதாவது டிரம்ப், ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்ப்ரிங்பீல்ட் -இல் குடியேற்றவாசிகள், மக்களின் வளர்ப்பு நாய்களை கொன்று சாப்பிடுகின்றனர். அமெரிக்கா வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர். என்று பேசியுள்ளார்.
நாய்
இருப்பினும் டிரம்ப் கூறியதற்கு எந்த விதமான ஆதரங்களும் இல்லை என்றும் இணையத்தில் பரவிய வதந்திகளை டிரம்ப் உண்மை போல பேசி வருவதாகவும் கண்டனங்கள் எழுந்தன. தற்போது, டிரம்ப் நாய்களை குடியேற்றவாசிகள் சாப்பிடுவதாக கூறியதை,
தனது ஓனருடன் சோபாவில் அமர்ந்து டிவியில் அதை பார்த்த நாய் ஒன்று அங்கிருந்து எழுந்து சோபவின் பின்னால் ஒளிந்துகொண்டு பயத்தில் வெலவெலத்து நிற்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
THEY'RE EATING THE DOGS pic.twitter.com/lQqMW5l8pT
— Tarquin ?? (@Tarquin_Helmet) September 11, 2024