பள்ளிக்குள் நுழைந்த தெரு நாய் - சிறுமியின் கன்னத்தை கடித்து குதறிய கொடூரம்!

Tamil nadu Ramanathapuram School Incident School Children
By Swetha Dec 18, 2024 03:20 AM GMT
Report

பள்ளிக்குள் புகுந்த நாய் சிறுமியை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்

 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சரஸ்வதி நகரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 4 வயது சிறுமி ஒருவர் எல்.கே.ஜியில் படித்து வருகிறார். அச்சிறுமி வகுப்பறையில் இருந்து கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

பள்ளிக்குள் நுழைந்த தெரு நாய் - சிறுமியின் கன்னத்தை கடித்து குதறிய கொடூரம்! | Dog Enter School Bites School Girl Is Hospitalized

அப்போது பள்ளி வளாகத்திற்குள் கூட்டமாக வந்த தெரு நாய்கள், சிறுமியை துரத்தி உள்ளது. பயந்து ஓடிய சிறுமியை நாய் ஒன்று கடித்து, முகத்தில் கொடூரமாக தாக்கியது. அந்த சிறுமியில் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த பணியாளர்கள்,

வாய்பேசமுடியாத சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

வாய்பேசமுடியாத சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

குதறிய கொடூரம்

அங்கு ஓடி வந்து நாயை துரத்தி சிறுமியை மீட்டனர். முகத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உடனே பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த தகவலறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள் சிறுமியை பார்த்து கதறி அழுதனர்.

பள்ளிக்குள் நுழைந்த தெரு நாய் - சிறுமியின் கன்னத்தை கடித்து குதறிய கொடூரம்! | Dog Enter School Bites School Girl Is Hospitalized

இந்த நிலையில், பரமக்குடியில் தெருநாய்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் கடித்து குதறுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.