மீண்டும் அரங்கேறிய கொடூரம்..சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய் - பரபரப்பு சம்பவம்!

Tamil nadu Chennai
By Swetha Sep 10, 2024 12:30 PM GMT
Report

சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்து இழுக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கொடூரம்..

சென்னை அருகே உள்ள அயப்பாக்கம் சர்ச் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ரக்ஷிதா 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் அதே பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.

மீண்டும் அரங்கேறிய கொடூரம்..சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய் - பரபரப்பு சம்பவம்! | Dog Bites Girl Who Went On A Street

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தனது வீட்டில் தயாரித்த பலகாரங்களை தான் முன்னாள் வசித்த வீட்டு உரிமையாளருக்கு மகள் ரக்ஷிதாவிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். பலகாரத்தை கொடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது அந்த வீட்டில் வளர்க்கும்,

வளர்ப்பு நாய் செய்த செயல்; சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள் - என்ன நடந்தது?

வளர்ப்பு நாய் செய்த செயல்; சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள் - என்ன நடந்தது?

வளர்ப்பு நாய்

லேப் வகை சேர்ந்த நாய் திடீரென சிறுமியின் கையில் கடித்து இழுத்து உள்ளது. இதனால் பதறிப்போன சிறுமி அலறி அழுதுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அரங்கேறிய கொடூரம்..சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய் - பரபரப்பு சம்பவம்! | Dog Bites Girl Who Went On A Street

இதனிடையே அப்பகுதியில் அந்த வளர்ப்பு நாயை முறையாக கட்டி போடுவதில்லை சாலையில் சுற்றி திரிவதால் அந்தப் பகுதியை கடந்து செல்ல மக்கள் அச்சம் தெரிவிப்பதாகவும் ஏற்கனவே அந்த நாய் ஒருவரை கடித்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.