வளர்ப்பு நாய் செய்த செயல்; சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள் - என்ன நடந்தது?

By Sumathi Jul 10, 2024 06:36 AM GMT
Report

வளர்ப்பு நாயால் கிராமமே சிறுத்தையிடம் இருந்து உயிர் தப்பியுள்ளது.

அலெர்ட் செய்த நாய்

கர்நாடகா, கிரேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹொன்னுார சாமி. இவர் கிராமத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

karnataka

இவரது வளர்ப்பு நாய், பண்ணை முன் திண்ணையில் படுத்திருந்துள்ளது. அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று நாயை பிடிக்க முயற்சித்துள்ளது. உடனே நாய் சிறுத்தையிடம் இருந்து தப்பி, கிராமத்திற்குள் ஓடி வீட்டிற்கு வந்துள்ளது.

கவலைக்கிடமான நிலையில் சிறுமி; 23 வகை நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு!

கவலைக்கிடமான நிலையில் சிறுமி; 23 வகை நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு!

தப்பித்த மக்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த ஹொன்னுார சாமி, பண்ணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

வளர்ப்பு நாய் செய்த செயல்; சிறுத்தையிடம் உயிர் தப்பிய மக்கள் - என்ன நடந்தது? | Dog Save Village People From Leopard Karnataka

தொடர்ந்து கிராமத்தினரிடம் விஷயத்தை கூறி, பண்ணைக்கு சென்று பார்க்கையில் சிறுத்தையை காணவில்லை. பண்ணையில் இருந்த ஆடுகள், கிடாக்கள், எருமைகளை தாக்கவில்லை.

இதனையடுத்து கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், ஊழியர்கள் கூண்டு வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.