மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர் - இடைவிடாமல் குறைத்து காப்பாற்றிய நாய்!

Japan
By Vinothini May 12, 2023 07:56 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபரை அருகில் இருந்த நாய் ஒன்று இடைவிடாமல் குறைத்தே காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாரடைப்பு

ஜப்பான் நாட்டின், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் எனும் பகுதியில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார்.

dog-awarded-for-saving-a-mans-life

இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது.

அதனால் அங்கிருந்தவர்கள், அந்த நாயின் அருகில் விழுந்து கிடந்த நபரை பார்த்து அதிர்ந்தனர்.

விருது

இதனை தொடர்ந்து, அங்குள்ளவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

dog-awarded-for-saving-a-mans-life

அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது.

தற்போது மாரடைப்பால் சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.