போனில் கேம்ஸ் விளையாடிய நோயாளி..அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் - புதிய சாதனை!
நோயாளியை மயக்கமடைய செய்யாமல் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.
அறுவை சிகிச்சை
இன்றைய காலக்கட்டத்தில் நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சிகிச்சை முறையில் நவீனமடைந்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள கல்யாண் சிங் புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவதுறையில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
லக்னோவை சேர்ந்த ஹரிஸ்சந்திரா பிரஜாபதி (56) என்பவர், கடுமையான தலைவலி, இடது கை மற்றும் கால்கள் பலவீனமான நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.
புதிய சாதனை
அவரை பரிசோதித்த டாக்டர்கள்,மூளையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்ததுடன், இதனால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து அவரை கல்யாண் சிங் புற்றுநோய் மையத்தில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு அவருக்கு
' அவேக் கிரனியோடோமி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதன்படி, ஹரிஸ்சந்திரா பிரஜாபதிக்கு தலையில் மட்டும் 'அனஸ்தீசியா' மருந்தை செலுத்தி உணர்விளக்க செய்தனர்.தொடர்ந்து மொபைலில் விளையாடவும், பேனாவை கையில் வைத்திருக்கவும் செய்த டாக்டர்கள்,
காலை அசைக்க செய்தனர். இதன் மூலம் நரம்பை கண்காணிக்கும் கருவியை பயன்படுத்தி கட்டி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து அதனை அகற்றினர். இதன் மூலம் நரம்பு பாதிப்பு ஏற்படும் பிரச்னையை தவிர்க்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.