மூக்கில் ரத்த கசிவு; குடியிருந்த நூற்றுக்கணக்கான புழுக்கள் - ஷாக் ஆன மருத்துவர்கள்!
ஒருவரது மூக்கில் நூற்றுக்கணக்கான புழுக்கள் உயிரோடு இருந்தது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மூக்கில் புழுக்கள்
அமெரிக்கா, புளோரிடா பகுதியில் வசிக்கும் ஒரு நபருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகம் முழுக்க வீக்கத்துடன், மூக்கில் ரத்தம் தொடர்ந்து கசிந்ததால் அவரால் பேசக்கூட முடியாத நிலையில் இருந்துள்ளார். அதை அடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவரின் மூக்கின் அடி குழி பகுதியில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை
இதனைதொடர்ந்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது மூக்கின் குழியில் இருந்து சுமார் 150 புழுக்களை உயிருடன் எடுத்துள்ளனர். இதைகுறித்து பேசிய மருத்துவர்கள் அந்த நபரின் மூக்கில் பல புழுக்கள் இருந்தன.
ஆனால், அவை அனைத்தும் உயிருடன் இருந்தன.
மேலும், அந்நபரின் மூக்கை சுத்தம் செய் சிறப்பான ஆன்டிபாராசிடிக் வழங்கப்பட்டுள்ளது எனவே அவர் விரைவில் குணமடைவார் என்றும் சுற்றுச்சூழலை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளர்.