15 வருடங்களாக பெண் அனுபவித்த கொடூரம் - ஆபரேஷன் செய்ததில் அதிர்ச்சி!

Uttar Pradesh Doctors
By Sumathi Oct 07, 2024 08:00 AM GMT
Report

 அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ முடி அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று வலி

உத்தரப் பிரதேசம், பரேலி பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் 16 வயதில் இருந்தே வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15 வருடங்களாக பெண் அனுபவித்த கொடூரம் - ஆபரேஷன் செய்ததில் அதிர்ச்சி! | Doctors Remove 2 Kg Hair Woman In Stomach Up

தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில், அந்த பெண்ணுக்கு முடி உண்ணும் டிரைகோலோடோமேனியா நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணும் சிறு வயதில் இருந்தே முடிகளை சாப்பிட்டு வந்துள்ளார்.

கல்லாக மாறிய கரு - 35 ஆண்டுகளாக வயிற்றில் கல் குழந்தையுடன் வாழ்ந்து வந்த 73 வயது மூதாட்டி

கல்லாக மாறிய கரு - 35 ஆண்டுகளாக வயிற்றில் கல் குழந்தையுடன் வாழ்ந்து வந்த 73 வயது மூதாட்டி

மருத்துவர்கள் அதிர்ச்சி

இதனையடுத்து மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் எம்.பி.சிங் மற்றும் மருத்துவர் அஞ்சலி சோனி தலைமையிலான மருத்துவக் குழு, அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது.

15 வருடங்களாக பெண் அனுபவித்த கொடூரம் - ஆபரேஷன் செய்ததில் அதிர்ச்சி! | Doctors Remove 2 Kg Hair Woman In Stomach Up

அதில், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடைக் கொண்ட முடிகளை அகற்றியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளார். அவருக்கு விரைவில் உளவியல் சிகிச்சை தரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.