கருக்கலைப்பு மாத்திரையால் நேர்ந்த விபரீதம் - பெண்ணின் வயிற்றில் எற்பட்ட வினோதம்!

India Andhra Pradesh
By Swetha Sep 03, 2024 11:15 AM GMT
Report

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருக்கலைப்பு 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த 27 வயதான இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பமானார்.

கருக்கலைப்பு மாத்திரையால் நேர்ந்த விபரீதம் - பெண்ணின் வயிற்றில் எற்பட்ட வினோதம்! | Abortion Pill Made Bone To Stay In Womans Stomach

ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் 3வது குழந்தையை பெற்றுக்கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை. இதனால் அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்ற அந்த பெண் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

மருந்தகத்தில் கருகலைப்பு செய்த இளம் பெண் உயிரிழப்பு

மருந்தகத்தில் கருகலைப்பு செய்த இளம் பெண் உயிரிழப்பு

வயிற்றில்.. 

ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது. இதன் காரணமாக கடந்த 3 வருடங்களாக அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணிற்கு,

கருக்கலைப்பு மாத்திரையால் நேர்ந்த விபரீதம் - பெண்ணின் வயிற்றில் எற்பட்ட வினோதம்! | Abortion Pill Made Bone To Stay In Womans Stomach

ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அப்பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தையின்,

எலும்புக்கூடை அகற்றினர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வார சிகிச்சைக்கு பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.