மருந்தகத்தில் கருகலைப்பு செய்த இளம் பெண் உயிரிழப்பு

Tamil Nadu Police
By Thahir Nov 20, 2022 10:10 AM GMT
Report

கடலுார் அருகே மருந்தகம் ஒன்றில் கருகலைப்பு செய்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கருகலைப்பு செய்த பெண் 

கடலுார் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அமுதா இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் அமுதா மீண்டும் கர்ப்படைந்துள்ளார்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்ள அமுதா விரும்பியுள்ளார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்துாரில் உள்ள தனியார் மருத்தகத்துக்கு சென்றார்.

Young woman dies after abortion at pharmacy

அங்கு மருந்தக உரிமையாளர் அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து பெண் சிசு இருப்பதாக கூறியுள்ளார்.

3வதும் பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா, கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த மருந்தகத்திலேயே கருவை கலைப்பதற்கான மாத்திரைகள் அமுதாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பரிதாபம் 

அதை வாங்கி சாப்பிட்ட அமுதா பின்னர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் தங்கிய நிலையில் அவருக்கு ரத்த போக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை வேப்பூர் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.