இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் ஆப்ரேஷன் - மருத்துவர் செய்த கொடூரம்!
இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் செய்த தவறு
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருந்துள்ளது. இதனால், சிறுவனின் பெற்றோர் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள

ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்ததில் அவரது கண்ணில் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் உள்ளது. அதனை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் போராட்டம்
தொடர்ந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆனால், மருத்துவர்கள் சிறுவனின் இடது கண்ணுக்குப் பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், இதுகுறித்து பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், மருத்துவரின் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை வந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு : குழம்பியது பயணத்திட்டம் IBC Tamil