தீயில் கருகி உயிரிழந்த பச்சிளம் குழந்தைகள்.. மருத்துவமனையில் நடனமாடிய டாக்டர்கள் - பகீர் வீடியோ!
மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடனமாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவர்கள்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தீன் தயாள் உபாத்யாய் மாவட்ட அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கொண்டாடும் விதமாக மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பணி இடைவெளி போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இணைந்து ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடியதாகக் கூறப்படுகிறது . இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்ச்சை
அந்த வீடியோவில் மருத்துவமனையின் தலைமை மருத்துவ பணியாளர் உள்ளிட்டோர் நடனமாடியுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் 54 குழந்தைகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடனமாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.