முதல்வர் தொகுதியில் பதற்றம் - கலெக்டர், தாசில்தாரை ஓட ஓட விரட்டியடித்த பொதுமக்கள்

India Telangana
By Karthikraja Nov 11, 2024 04:00 PM GMT
Report

அரசு அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலம் கையகப்படுத்தல்

தெலுங்கானா மாநிலம் கோடங்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள லக்செர்லா என்ற கிராமத்தில் புதிதாக மருந்து நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Vikarabad collector

கோடங்கல் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சொந்த தொகுதி ஆகும். இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுமக்கள் தாக்குதல்

இந்த நிகழ்விற்கு விகாராபாத் (vikarabad)மாவட்ட கலெக்டர் பிரதீக் ஜெயின் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மக்கள், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியரை பேச விடாமல் அவரை பொது மக்கள் தாக்க முயன்றனர். 

நிலைமையை உணர்ந்த அதிகாரிகள் ஆட்சியரை பொதுமக்களிடமிருந்து மீது காரில் ஏற்றி அனுப்பினர். ஆனால் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் கண்ணாடிகள் நொறுங்கியது. 

மேலும் பொதுமக்களிடம் சிக்கிய தாசில்தாரை ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அங்கு நின்று கொண்டிருந்த அரசு அதிகாரிகளின் 3 கார்களை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.