தலையில் ஆப்ரேஷன்; துணியை வைத்து தைத்த மருத்துவர்கள் - கவனக்குறைவால் நேர்ந்த அவலம்!
தலையில் ஆப்ரேஷன் செய்த மருத்துவர் துணியை வைத்த தைத்த அவலம் நடந்துள்ளது.
மருத்துவர்கள்
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்தது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பிட்டெரு வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை முடிந்த பூபதி வீடு திரும்பிய ஒரு சில நாட்களுக்கு பிறகு காயம் இருந்த இடத்தில் அதிக வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் ரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விரைந்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கவனக்குறைவு
அதாவது, தலையில் தையல் போட்ட இடத்தில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை வைத்து தைத்திருப்பது கண்டு மருத்துவர்கள் மிரண்டனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை மூலம் அந்த துணியை மருத்துவர்கள் அகற்றினர்.
இத்தகைய கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூபதி புகார் அளித்துள்ளார்.