'Doctor Yellow' புல்லட் ரயில்; இதில் யாராலும் பயணிக்க முடியாது - ஏன் தெரியுமா?
டாக்டர் எல்லோ புல்லட் ரயில் ஜப்பானின் பெருமிதமாக கருதப்படுகிறது.
டாக்டர் எல்லோ
ஜப்பானில் 300-க்கும் மேற்பட்ட புல்லட் ரயில்கள் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இந்த புல்லட் ரயில்கள் முன்புறம் அக்குவா பச்சையிலும், பின்புறம் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
எனினும், ஜப்பானில் முழுக்க முழுக்க மஞ்சள் நிறத்தாலான ‘Doctor Yellow’ என்ற புல்லட் ரயில் உள்ளது. டாக்டர் எல்லோ என்பது Shinkansen சோதனை ரயில் ஆகும். இந்த ரயிலில் பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த ரயில் ரயில் தண்டவாளங்களை சோதித்து பிரச்சனைகள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்காணிக்கிறது. மேலும், ஓவர் ஹெட் வயர்கள், சிக்னல்கள், உபகரணங்களில் பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக இன்ஜினியர்களுக்கு தகவல் தெரிவித்து எச்சரிக்கிறது.
பெருமிதம்
தண்டவாள அமைப்பை ஆய்வு செய்வதற்காக ரயிலின் உள்ளே நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 1 மணி நேரத்தில் 443 கி.மீ வேகத்தில் பயணித்து, ரயில் தண்டவாளங்கள் மற்றும் அவற்றின் நிலை தன்மையை சோதிக்கிறது.
இந்த சோதனைகளுக்காக உதவுவதால் இந்த புல்லட் ரயிலுக்கு டாக்டர் எல்லோ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், எளிதாக புலப்பட வேண்டும் என்பதற்காகவும், மஞ்சள் நிறம் ஜப்பானில் மகிழ்ச்சியை குறிப்பதாலும் இந்த ரயில் முழுக்க முழுக்க மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த தனித்துவமான புல்லட் ரயிலை ஜப்பானியர்கள் பெருமிதமாக கருதுகின்றனர்.