டீசல் ரயில்கள்.. 1 லிட்டர் போட்டால் எவ்வளவு மைலேஜ் தரும்? ஆச்சரிய தகவல்!

India Indian Railways Railways
By Jiyath Apr 29, 2024 03:07 AM GMT
Report

டீசலில் இயங்கும் ரயில்களின் மைலேஜ் குறித்த தகவல். 

டீசல் ரயில்கள் 

ரயில்கள் ஆரம்பத்தில் நிலக்கரியை எரிய வைத்து இயக்கப்பட்டது. தற்போது மின்சார ரயில்கள் வந்துவிட்டன. ஆனால், டீசலில் இயங்கும் ரயில்களும் புழக்கத்தில் உள்ளன. ஒரு டீசல் ரயிலின் மைலேஜ் என்பது அதன் எடை, திறன், பயண தூரம் ஆகியவற்றை பொருத்தது.

டீசல் ரயில்கள்.. 1 லிட்டர் போட்டால் எவ்வளவு மைலேஜ் தரும்? ஆச்சரிய தகவல்! | The Mileage Of The Train Per 1 Litre Diesel

உதாரணமாக 12 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயிலும், 24 பெட்டிகள் கொண்ட சூப்பர் பாஸ்ட் ரயிலும்1 கி.மீ தூரம் பயணிக்க 6 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஆனால், 12 பெட்டிகளை கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் 1 கி.மீ தூரம் செல்ல 4.5 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.

தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?

தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?

எரிபொருள் தேவை

இந்த மைலேஜ் ரயில்களின் நிறுத்தங்களை அடிப்படையிலும் முடிவு செய்யப்படுகிறது. ரயில்கள் அடிக்கடி பிரேக் பிடித்துக் கொண்டே இருந்தால் எரிபொருள் தேவை அதிகரிக்கும் மைலேஜ் குறையும்.

டீசல் ரயில்கள்.. 1 லிட்டர் போட்டால் எவ்வளவு மைலேஜ் தரும்? ஆச்சரிய தகவல்! | The Mileage Of The Train Per 1 Litre Diesel

சூப்பர் பாஸ்ட் ரயில்கள் 1 லிட்டர் டீசலில் 230 மீட்டர் தூரம் வரையிலும் செல்லும். அதேபோல் பாசன்ஜர் ரயில்கள் 180- 200 மீட்டர் வரையிலும் செல்லும். ஒரு டீசல் என்ஜினின் மைலேஜ் 1 மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.