வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்ற பெண்.. ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் - அதிர்ச்சி!
பெண் ஒருவர் வயிற்று வலிக்காக மருத்துவமனை சென்றபோது டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு போஸ்கோ நகரை சேர்ந்த பல்மருத்துவர் அர்ச்சனா என்பவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றார்.
அப்பொழுது மருத்துவர் தியாகராஜன் என்பவர் அர்ச்சனாவிடம் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் டாக்டருடன் தகராறில் ஈடுபட்டனர், மேலும், அந்த மருத்துவமனையை கல்லால் அடித்து நொறுக்கினர்.
பாதிக்கப்பட்ட பெண்
இந்நிலையில், தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் மருத்துவர் தியாகராஜனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பெண் பல் மருத்துவர் கூறுகையில், "வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர் பேண்ட கழட்டு என்று கூறி ஆபாசமாக பேசத் தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன். மேலும் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.